COVID-19: உணவு, மளிகைப்பொருள்களை வீட்டில் விநியோகம் செய்ய அனுமதி..!

COVID-19: Taxi, private-car hire drivers allowed to make home deliveries
COVID-19: Taxi, private-car hire drivers allowed to make home deliveries to meet increased demand

COVID-19 பரவல் காரணமாக அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், டாக்ஸி மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் இனி மளிகை மற்றும் உணவு விநியோகங்களை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) தெரிவித்துள்ளார்.

திரு காவ் பேஸ்புக் பதிவில் குறிப்பிடுகையில், வீட்டில் விநியோகம் செய்வதற்கான தேவை அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : Coronavirus: சிங்கப்பூரில் COVID-19 காரணமாக மூன்றாவது நபர் இறப்பு..!

மேலும், வரும் வாரங்களில் இது தொடர்ந்து அதிகரிக்கும் என்றும், அதிகமானவர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ளதை தொடர்ந்து தேவை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கை, வீட்டிலிருந்து வேலை செய்வது ஆகிய நடவடிக்கை மூலம், உணவு அல்லது மளிகைப் பொருட்களின் வீட்டு விநியோகத்திற்கான தேவை அதிகரித்துள்ளது.

ஆன்லைன் உணவு விநியோகத்திற்கான பூர்த்தி விகிதங்களில் சரிவை கவனித்து வருவதாகவும், வீட்டிலிருந்து அதிகமான மக்கள் வேலை செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதால், வீட்டு விநியோகத்திற்கான தேவை வரவிருக்கும் வாரங்களில் மட்டுமே அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கிராப் நிறுவன ஓட்டுநர்களை உணவு, பொருள் விநியோகம் செய்ய அனுமதிக்கும் சோதனைத் திட்டத்தை விரிவுபடுத்த அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. மேலும், இதர நிறுவனங்களின் ஓட்டுநர்களுக்கும் அது பொருந்தும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு COVID-19 தொற்று உறுதி..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #Tamilnews #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil