“சிங்கப்பூரில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையா?”- இந்திய தூதரகம் விளக்கம்!

Photo: Changi Airport

கொரோனாவின் ஓமிக்ரான் BF.7 என்ற வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்கள் மற்றும் சர்வதேச விமான பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் பாகம்- 2 எப்போது வெளியாகிறது?- அறிவிப்பை வெளியிட்டது லைகா நிறுவனம்!

அதன்படி, இந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளை ரேண்டம் அடிப்படையில் ஆர்டி- பிசிஆர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் பயணிகள் 72 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, அதில் நெகட்டிவ் என்று முடிவுகள் வந்திருக்க வேண்டும் என்று இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாக கடந்த டிசம்பர் 24- ஆம் தேதி அன்று செய்திகள் வெளியாகியிருந்தனர்.

‘புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, பேருந்து சேவைகளில் மாற்றம்’- எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனம் அறிவிப்பு!

இந்த நிலையில், சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் (High Commission of India in Singapore) தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அளித்துள்ளப் பேட்டியில், “இந்திய சுகாதாரத்துறை அமைச்சர், சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், பாங்காக் ஆகிய நாடுகளை மட்டுமே தனது காணொளியில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் சிங்கப்பூரைப் பற்றிக் குறிப்பிடவே இல்லை” எனத் தெரிவித்துள்ளது. எனவே, சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.