COVID-19: இந்தியாவில் உள்ள சிங்கப்பூரர்களை அழைத்துவர சிறப்பு விமானங்கள் ஏற்பாடு..!

COVID-19: Travel advisory for Singapore

இந்திய நாட்டில் இருக்கும் சிங்கப்பூரர்களையும், நிரந்தரவாசிகளையும் (PR) சிங்கப்பூருக்கு திரும்ப அழைத்து வருவதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 2 விமானச் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19 தொற்று காரணமாக சிங்கப்பூரில் 4வது நபர் மரணம்..!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

சிறப்பு விமானம் SQ423 ஏப்ரல் 9 வியாழக்கிழமை டெர்மினல் 3, (இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து) இரவு 9 மணிக்கு டெல்லியில் இருந்து மும்பைக்கு புறப்படும்.

அதன் பிறகு இரவு 11.40க்கு, (சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து) மும்பையில் இருந்து சிங்கப்பூருக்குப் புறப்படும்.

பதிவு செய்ய : httpd://form.gov.sg/

ஸ்கூட் விமானம்

சிறப்பு விமானம் ஸ்கூட் TR 579, ஏப்ரல் 10 வெள்ளிக்கிழமை சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து நள்ளிரவு 1.20 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்படும்.

குறிப்பு: சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் மட்டுமே அந்த விமானங்களில் அனுமதிக்கப்படுவார்கள்.

டிக்கெட் தொடர்பாக விவரங்கள் அறிய வெளியுறவு அமைச்சகத்தின் இணையத்தள பக்கத்திற்கு செல்லவும்.

பதிவு செய்ய : https://form.gov.sg/