வெளிநாட்டு ஊழியர்களுக்கு தற்காலிக தங்கும் வசதிகளாக மாற்றப்பட உள்ள இரண்டு முன்னாள் பள்ளி வளாகங்கள்..!

COVID-19: Two former school sites to be converted into temporary dorms for migrant workers who are well
COVID-19: Two former school sites to be converted into temporary dorms for migrant workers who are well (Photo: Google Street View)

சிங்கப்பூரில் உள்ள முன்னாள் ஹாங் கா (Hong Kah) உயர்நிலைப் பள்ளி மற்றும் பெடோக் நார்த் (Bedok North) உயர்நிலைப் பள்ளி ஆகியவை ஆரோக்கியமாக உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு தற்காலிக தங்கும் வசதிகளாகப் பயன்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சகம் (MOE) வெள்ளிக்கிழமை (மே 22) ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேலும் அந்த தளங்களை நிர்வகிக்க, கல்வி அமைச்சகம் ஒரு பணிக்குழுவை அமைத்துள்ளது. அதாவது அந்த பணிக்குழு, MOE மற்றும் வெளிப்புற நடவடிக்கை சம்பந்தப்பட்ட (OBS) அதிகாரிகளையும் உள்ளடக்கியது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30,000ஐ தாண்டியது..!

வெளிநாட்டு ஊழியர்களின் அடிப்படை தேவைகள், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்ய MOE அல்லது OBS அதிகாரிகளின் குழு ஒவ்வொரு தற்காலிக தங்கும் விடுதிகளிலும் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதலாக, கிருமித்தொற்று பரவும் அபாயத்தைத் குறைக்க, சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை அந்த குழு உறுதி செய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அத்தியாவசியச் சேவைகளில் ஈடுபட்டுள்ள ஆரோக்கியமான வெளிநாட்டு ஊழியர்கள் தனியாகத் தங்கவைப்படுவார்கள் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் ஒருவர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சகம்..!