சிங்கப்பூரில் குழந்தைகளுக்கு தடுப்பூசி: MOE பள்ளிகளில் முன்பதிவு தொடக்கம்

Facebook/Chan Chun Sing

சிங்கப்பூரில் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான SMS குறுஞ்செய்தியை மாணவர்களின் பெற்றோர்கள் நாளை புதன்கிழமை (டிசம்பர் 22) முதல் பெறுவார்கள்.

கல்வி அமைச்சகத்தின் (MOE) பள்ளிகளில் படிக்கும் 12 வயதுக்குட்பட்ட Primary 4 முதல் Primary 6ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் 100,000க்கும் மேற்பட்ட பெற்றோர்களுக்கு SMS அனுப்பப்படும்.

பற்றி எரிந்த தீ.. 2வது மாடியில் இருந்து குதித்த ஆடவர் – இவரை காப்பாற்ற வெளிநாட்டு ஊழியர் எடுத்த முயற்சிகள் வீண்

SMSஇல் உள்ள தனித்துவமான இணைப்பைப் பயன்படுத்தி, தேசிய முன்பதிவு முறையில் நேரடியாக டிசம்பர் 27 முதல் தொடங்கும் தடுப்பூசி இடங்களை முன்பதிவு செய்யலாம் என்று MOE தெரிவித்துள்ளது.

இது மதரஸாக்களில் உள்ள மாணவர்களின் பெற்றோருக்கும் பொருந்தும் என்றும் அது கூறியுள்ளது.

2009 மற்றும் 2012க்கு இடையில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர்கள், சர்வதேச பள்ளிகள் மற்றும் home-schooled உட்பட பள்ளி வகையைப் பொருட்படுத்தாமல், டிசம்பர் 27 முதல் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முன்பதிவு செய்ய முடியும்.

இந்த மாத தொடக்கத்தில் மேற்கண்ட வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குப் பயன்படுத்த Pfizer-BioNTech/Comirnaty COVID-19 தடுப்பூசிக்கு சிங்கப்பூர் ஒப்புதல் அளித்தது.

மரத்தூளுக்குள் தங்கம்…சென்னை விமான நிலையத்தில் சிக்கிய பயணிகள்- அதன் மதிப்பு ரூ.49 லட்சமாம்!