சிங்கப்பூரில் டெல்டா கிருமி அலை உச்சத்தின்போது 8,000 உயிரிழப்புகளை தவிர்க்க உதவியது “தடுப்பூசி”

Photo: Ministry Of Health/Facebook Page

சிங்கப்பூரில் நாடு தழுவிய அளவில் தடுப்பூசி போடப்பட்டதன் காரணமாக கடந்த ஆண்டு டெல்டா கிருமி அலையின் உச்சத்தின் போது சுமார் 8,000 கோவிட் -19 இறப்புகள் தவிர்க்கப்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல், நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட 33,000 பேர் இந்த தடுப்பூசி உதவியால் பாதுகாக்கப்பட்டனர்.

போக்குவரத்து காவல் அதிகாரியிடம் தன்னுடைய வேலையை காட்டிய வெளிநாட்டு ஊழியர் – தூக்கிய போலீஸ்

மேலும், மருத்துவமனைகளில் 112,000 பேர் அனுமதிக்கப்படாமல் தவிர்க்கவும் தடுப்பூசிகள் உதவியது.

2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் தொற்றுநோயின் தாக்கத்தைத் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட வரவு செலவுத் திட்டங்களில் பல்வேறு நடவடிக்கைகளின் தாக்கம் குறித்த அறிக்கையில் இந்த புள்ளிவிவரங்கள் வெளியானது.

சுகாதார அமைச்சகத்தின் (MOH) புதிய மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் நிதி அமைச்சகம் வெளியிட்ட 58 பக்க அறிக்கையில் (பிப்ரவரி 17) வெளியானது.

நீண்ட கால அனுமதி உடையோருக்கு VTP பயண அனுமதி அவசியம் இல்லை – அப்போ Work Permit அனுமதிக்கு?