சிங்கப்பூரில் கொரோனாவால் மேலும் 3 பேர் மரணம்

(Photo: Tan Tock Seng Hospital/ Facebook)

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்று காரணமாக மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

அந்த மூவரையும் சேர்த்து சிங்கப்பூரில் தொற்றுநோய் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 65ஆக அதிகரித்துள்ளது.

பொய்யான தகவல்கள் மூலம் “Work Pass” அனுமதி பெற முயற்சி – 18 பேர் கைது

முதல் நபர்:

74 வயதான ஆடவர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். அவர் கடந்த ஆகஸ்ட் 31 அன்று டான் டோக் செங் மருத்துவமனையில் வேறொரு மருத்துவ பிரச்சனைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

இருப்பினும், செப்டம்பர் 9 அன்று எடுக்கப்பட்ட மற்றொரு சோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.

முத்த டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட அந்த ஆடவருக்கு, நாள்பட்ட சிறுநீரக நோய், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை இருந்துள்ளது.

இரண்டாம் நபர்:

மற்றொரு நபர் 62 வயது பெண், கடந்த திங்களன்று இறந்ததாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அந்தப் பெண்ணுக்கு, கடந்த ஜூலை 23 அன்று கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது. மறுநாள் கூ டெக் புவாட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஹைப்பர்லிபிடேமியா போன்ற பிரச்சனைகள் இருந்துள்ளது.

மூன்றாம் நபர்:

கடைசி நபர், 83 வயது ஆடவர். இவரும் கடந்த திங்களன்று இறந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆடவர் தொற்று அறிகுறிகளுடன் கடந்த செப்டம்பர் 15 அன்று இங் டெங் ஃபாங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அதே நாளில் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர் கோவிட் -19க்கு எதிராக முழுமையான தடுப்பூசி போட்டுக்கொண்டவர், மேலும் நாள்பட்ட நுரையீரல் நோய், தொடர்ச்சியான ஆஸ்பிரேஷன் நிமோனியா, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் அவருக்கு இருந்துள்ளது.

துவாஸ் வெடிப்பு: இயந்திர குறைபாடு குறித்து ஊழியர்கள் முன்பே புகார் செய்தனர்