பொய்யான தகவல்கள் மூலம் “Work Pass” அனுமதி பெற முயற்சி – 18 பேர் கைது

பொய்யான தகவல்கள் மூலம் பெறப்பட்ட “Work Pass” அனுமதி மூலம் வெளிநாட்டவர்களை சிங்கப்பூருக்கு அழைத்து வர முயன்றதாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மனிதவள அமைச்சகம் (MOM) செவ்வாய்க்கிழமை (செப். 21) தெரிவித்தது.

கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி அமைச்சகத்தால் நடத்தப்பட்ட அதிரடி அமலாக்க நடவடிக்கையின் பகுதியாக அந்த சந்தேகத்திற்குரிய நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தீவு முழுவதும் சுமார் 22 இடங்களில் 12 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடவடிக்கை நடைபெற்றது எனவும் MOM கூறியுள்ளது.

துவாஸ் வெடிப்பு: இயந்திர குறைபாடு குறித்து ஊழியர்கள் முன்பே புகார் செய்தனர்

வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக ஒர்க் பாஸ் பெற முயல்வது பற்றிய தகவலைப் பெற்ற உடன் அமைச்சகம் தனது விசாரணையை கடந்த ஜூலை மாதம் தொடங்கியதாக ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சில மாதங்கள் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகள் மூலம், சில போலி நிறுவனங்களை அமைத்து ஒர்க் பாஸ் அனுமதிக்கு விண்ணப்பிக்க அவர்கள் முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.

முறையான வேலை அனுமதி இல்லாமல் வேலை செய்யும் வெளிநாட்டவருக்கு S$20,000 வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

தண்டனை பெற்றவர்கள் சிங்கப்பூரில் வேலை செய்வதற்கு நிரந்தரமாக தடை விதிக்கப்படும்.

இந்திய இனத்தவரை இன ரீதியாக பேசி, உதைத்து காயப்படுத்திய ஆடவர் மீது குற்றச்சாட்டு