COVID-19 பாதிக்கப்பட்ட நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்.!

Covid19 new places list
Pic: Google Maps/Chen M

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதில், மார்சிலிங் லேன் உணவங்காடி (Marsiling Lane Food Centre), Causeway Point கடைத்தொகுதியில் உள்ள Popular Bookstore மற்றும் Woodlands Civic Centre-இல் உள்ள NTUC FairPrice ஆகியவையும் பொது இடங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

Table: MOH

மேலே குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு சென்று வந்தோர் 14 நாட்கள் தங்கள் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

அந்த இடங்களை பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

தொற்று பாதிப்பு உறுதியான நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் வீட்டிற்கு வழி தெரியாமல் தவித்த முதியவருக்கு உதவி செய்த ஆடவர்.!