2019 ஆம் ஆண்டின் முதல் பாதியில் குற்ற விகிதம் அதிகரித்திருப்பதாக SPF தெரிவித்துள்ளது.!

In Singapore Overall Crime increased by 7% to 16,745 cases in the first six months of 2019, from 15,649 cases in the same period in 2018.

இந்த வருடத்தின் முதல்பாதியில் குற்ற விகிதம் அதிகரித்திருப்பதாகவும், அதில் அதிகமான குற்றங்கள் மோசடிகள் மூலம் அரங்கேறி இருப்பதாகவும் SPF தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த குற்றங்கள் 2019 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 7% அதிகரித்து 16,745 வழக்குகளாக அதிகரித்துள்ளது. இது 2018 ஆம் ஆண்டில் இதே 6 மாத காலக்கட்டத்தில் 15,649 வழக்குகளாக இருந்தது, என SPF தெரிவித்துள்ளது.

மோசடி வழக்குகளின் அதிகரிப்பு காரணமாக இந்த குற்றங்களின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குற்றங்களில், முதல் பத்து வகையான மோசடிகள் தொடர்பான வழக்குகளை நீக்கினால், 2018 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்திலிருந்து 2019 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பதிவான மொத்த குற்றங்களின் எண்ணிக்கை வெறும் 0.5% மட்டுமே ஆகும். (13,089 முதல் 13,154 வரை)

முதல் பத்து வகையான மோசடிகளில், மின்னணு வணிக மோசடிகள், கடன் மோசடிகள், பாலியல் கடன் மோசடிகள் மற்றும் இணைய வழி காதல் மோசடிகள் ஆகியவை முக்கிய குற்றங்களாக இருக்கின்றன.

இந்த நான்கு வகையான மோசடிகள் 2019 முதல் பாதியில் பதிவான முதல் பத்து மோசடி வகைகளில் 80% ஆகும். மேலும், இந்த நான்கு வகையான மோசடிகளுக்கான மொத்த வழக்குகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. 2018 ஆம் ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 60% அதிகரித்துள்ளது.

அதேபோல் 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஷாப்பிங் மால்களில் Outrage Of Modesty (OM) குற்றங்கள் அதிகரித்துள்ளது. ஆனாலும், 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த OM குற்றங்கள் குறைந்துள்ளது, என SPF கூறியுள்ளது

சிங்கப்பூரை பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள ஒவ்வொருவரும் சிறந்த ஒத்துழைப்பை தரும்படி கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், மோசடிகள் மற்றும் OM க்கு போலீஸ் நடைமுறைபடுத்தியுள்ள நடவடிக்கைகள் பற்றி மேலும் அறிய இணைய முகவரி :

https://www.police.gov.sg/…/mid_year_crime_statistics_for_j…