சிங்கப்பூரின் 2ம் கட்டத் தளர்வு – ஆர்ச்சர்ட் ரோடு ஷாப்பிங் வட்டாரத்தில் குவிந்த மக்கள்..!

Crowds return to Orchard Road, long lines at mall entrances as shops reopen after more than 2 months
Crowds return to Orchard Road, long lines at mall entrances as shops reopen after more than 2 months (Photo: Mothership)

சிங்கப்பூரின் இரண்டாம் கட்டத் தளர்வு தொடங்கப்பட்ட நிலையில், சிங்கப்பூரின் ஆர்ச்சர்ட் ரோடு ஷாப்பிங் வட்டாரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 19) மக்கள் கூட்டம் அலைமோதியது.

சில்லறை விற்பனை நிலையங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்ட முதல் நாளில் பல வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்க ஆர்வமாக இருந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் அருங்காட்சியகங்கள், இந்திய பாரம்பரிய மையம் உள்ளிட்டவை மீண்டும் திறக்கப்படும்..!

நேற்று பிற்பகல் ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள மால்கள் மற்றும் சில கடைகளின் நுழைவாயில்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாக CNA குறிப்பிட்டுள்ளது.

சில பிரபலமான பிராண்டுகளான Zara at Ngee Ann City, Dior at ION Orchard மற்றும் மாண்டரின் கேலரியில் Victoria’s Secret போன்ற கடைகளுக்கு வெளியே நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடைகள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைக்க முயற்சிப்பதே இதற்குக் காரணம்.

Safe Entry முறை, உடல் வெப்பநிலைச் சோதனை ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

Ngee Ann City கடைத்தொகுதிக்கு நேற்று காலை 11 மணிக்கும், மதியம் 2 மணிக்கும் இடையே சுமார் 18,000 பேர் வருகை புரிந்ததாகக் கடைத்தொகுதி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் இந்த எண்ணிக்கை பாதிக்கு குறைவு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரர்கள் சுதந்திரமாக மலேசியா வர அனுமதிக்கிறோம்; அதே போல மலேசியர்களை அனுமதிக்க வேண்டும் – மலேசியா..!