ஐந்து வாகனங்கள் மோதி கடும் விபத்து – ஆடவர் ஒருவர் மரணம்

cte-accident-involving-5-vehicles
(Photo via Patrick Tan/Facebook)

மத்திய அதிவேக விரைவுச்சாலையில் (CTE) நேற்று இரவு (ஜூலை 23) ஏற்பட்ட விபத்தைத் அடுத்து, 31 வயது ஆடவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்தில் அவருடன் சேர்த்து மொத்தம் 7 பேர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அனுப்பப்பபட்டனர்.

பயணங்களை மீண்டும் தொடங்கும் திட்டம் எப்போது சாத்தியமாகும்.? – அமைச்சர் தகவல்.!

விபத்து

அந்த விபத்தைத் தொடர்ந்து அனைத்து பாதைகளிலும் அதிக வாகன நெரிசல் காணப்பட்டத்தை வலைத்தளங்களில் பகிரப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளின் மூலம் காணமுடிகிறது.

இந்த சம்பவம் CTEஇல், கேவனாக் (Cavenagh) சாலை வெளியேறிய பின்னர், SLE நோக்கி செல்லும் வழியில் நடந்தது.

இந்த விபத்தில் இரண்டு கார்கள், லாரி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCDF தகவல்

இரவு 9:20 மணியளவில் இந்த விபத்து குறித்து தகவல் கொடுக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

கார் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது, யாரும் அதில் சிக்கவில்லை என்றும், தீ அணைக்கப்பட்டதாகவும் SCDF கூறியுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான, 31 வயது ஆடவருக்கு ஏற்பட்ட கடுமையான காயங்களால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார் என்றும் கூறியுள்ளது.

காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள்… வர்த்தக சங்கங்கள் கோரிக்கை