S$7.50 செலுத்துவதற்கு பதிலாக S$750 செலுத்திய வாடிக்கையாளரைத் தேடும் கடையின் உரிமையாளர்!

S$7.50 செலுத்துவதற்கு பதிலாக S$750 செலுத்திய வாடிக்கையாளரைத் தேடும் கடையின் உரிமையாளர்!
Photo: Wang Fu (Facebook)

சிங்கப்பூரில் உள்ள லக்கி பிளாசாவில் (Lucky Plaza) ‘வாங் ஃபூ ரோஸ்டடு டிலைட்’ (WANG FU ROASTED DELIGHT) என்ற பெயரில் இயங்கி வரும் கடைக்கு கடந்த டிசம்பர் 11- ஆம் தேதி அன்று காலை 11.00 மணிக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் தான் வாங்கிய உணவிற்கு S$7.50 என்ற பணத்தைச் செலுத்துவதற்கு பதிலாக S$750- யை ‘NETS’ என்ற ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் தவறுதலாகச் செலுத்தியுள்ளார்.

சிங்கப்பூரில் 10 முதலாளிகளில் 8 பேர் ஒரு மாத சம்பளத்தை போனஸ்-ஆக வழங்க விருப்பம் – 2024 இல் எதிர்பார்க்கலாம்

தனது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தின் தொகை அதிகரித்துள்ளதை அறிந்த கடையின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். அத்துடன், தனது வங்கிக் கணக்கை ஆராய்ந்தார். அதில், கடைக்கு வந்த வாடிக்கையாளர்களில் ஒருவர் S$7.5 செலுத்த வேண்டியதற்கு பதிலாக S$750 செலுத்தியுள்ளார் என்பதைக் கண்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து, ‘NETS’ நிறுவனத்தை நாடிய கடை உரிமையாளருக்கு பின்னடைவு ஏற்பட்டது. தனிநபரின் விவரத்தைக் கொடுக்க முடியாது என அந்நிறுவனம் கூறியுள்ளது. இதையடுத்து, டிசம்பர் 12- ஆம் தேதி தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள கடையின் உரிமையாளர் வாங் ஃபூ (Wang Fu) , “தனது வாடிக்கையாளர்கள் வாங்கிய உணவிற்கு செலுத்த வேண்டிய தொகையை விட அதிகமாகச் செலுத்தியுள்ளார். எனவே அவர் பற்றிய தகவல் கிடைத்தால் 9712-4567 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம். சம்மந்தப்பட்ட வாடிக்கையாளர் செலுத்திய அதிகமான தொகையைத் திருப்பிக் கொடுக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ART கருவிகளை வாங்கி குவிக்கும் பொதுமக்கள் – சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்

இதனிடையே, இந்த கடையில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்படவில்லை என்றும் கடையின் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.