ART கருவிகளை வாங்கி குவிக்கும் பொதுமக்கள் – சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்

public-should-not-hoard-art-kits moh

சிங்கப்பூரில் ART என்னும் விரைவு பரிசோதனை கருவிகளை வாங்கி குவித்து வைக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்து வருவதால், ART கருவிகளின் தேவை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

சிங்கப்பூரில் 10 முதலாளிகளில் 8 பேர் ஒரு மாத சம்பளத்தை போனஸ்-ஆக வழங்க விருப்பம் – 2024 இல் எதிர்பார்க்கலாம்

சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மருந்தகங்களில் போதுமான அளவு ART கருவிகள் இருப்பு உள்ளதாகவும் அது கூறியது.

மேலும், அதிகரிக்கும் தேவையை பூர்த்தி செய்ய புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக MOH அறிக்கையில் தெரிவித்தது.

எனவே தேவையை விட அதிகமாக ART கருவிகளை வாங்கி குவிக்க வேண்டாம் என சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மீண்டும் சர்க்யூட் பிரேக்கர் எனும் அதிரடி திட்டமா..? – உண்மை என்ன?