சைக்கிள் மோதிய விபத்தில் இறந்த ஆடவர்… சைக்கிள் ஓட்டிய வெளிநாட்டவருக்கு சிறை!

Cyclist jailed pedestrian died
(AP PHOTO/WONG MAY-E)

விபத்து நடந்த 5 நாட்களுக்குப் பிறகு பாதசாரி ஒருவர் காயங்கள் காரணமாக உயிரிழந்ததை அடுத்து, சைக்கிள் ஓட்டுநருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் கவனக்குறைவாக சைக்கிள் மூலம், திரு சீவ் ஃபூக் யூ (Chew Fook Yew) என்பவருக்கு மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றத்தை பின்லாந்தை சேர்ந்த டோனி டிமோ சால்மினன் (Toni Timo Salminen) ஒப்புக்கொண்டார்.

சென்னையில் இருந்து சிங்கப்பூர் பறக்கவிருந்த விமானத்தில் கோளாறு..!

இந்த குற்றத்திற்காக அவருக்கு இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 10) ஒரு வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

42 வயதான அந்த குற்றவாளி கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி சிம்ஸ் அவென்யூ (Sims Avenue) வழியாக சைக்கிள் ஓட்டிச்செல்லும் போது கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

திரு சீவ் விபத்து நடந்த உடன் அசைவில்லாமல் கீழே கிடந்துள்ளார், பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

அன்று இரவு 7.08 மணியளவில் சால்மினென் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

இந்த விபத்தில் திரு சீவ், கடந்த ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் உயிரிழந்தார்.

கவனக்குறைவாக சைக்கிள் ஓட்டி மரணத்தை விளைவித்த குற்றத்திற்காக, இரண்டு ஆண்டுகள் வரை சிறை , அபராதம் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் புதிய பட்டதாரிகள், பணியிடை மாற்றம் செய்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…