‘மிக்ஜாம் புயல்’- வெளுத்து வாங்கிய கனமழை….மூடப்பட்ட சென்னை விமான நிலையம்!

'மிக்ஜாம் புயல்'- வெளுத்து வாங்கிய கனமழை....மூடப்பட்ட சென்னை விமான நிலையம்!
Photo: Chennai Airport

 

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை சர்வதேச விமான நிலையத்தில மழைநீர் கரைபுரண்டோடுவதால், மோசமான வானிலை காரணமாக, நாள் முழுவதும் சென்னை சர்வதேச விமான முனையம் மற்றும் உள்நாட்டு விமான முனையம் மூடப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆப்பிள் சாதனங்களை திருடிய ஆடவர் – எட்டு மாத சிறை விதித்து அதிரடி தீர்ப்பு

குறிப்பாக, சென்னை விமான நிலையம் இன்று (டிச.04) காலை 09.17 மணி முதல் இரவு 11.00 மணி வரை மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மேலே குறிப்பிட்டுள்ள நேரத்தில் விமான சேவைகள் இருக்காது. விமானங்கள் புறப்பாடும், வருகையும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியருக்கு சொன்ன சம்பளம் கொடுக்காமல் அலைக்கழித்த முதலாளி – சட்டப்படி அணுகி S$13,677 தொகையை வாங்கி அசத்திய ஊழியர்

இதன் காரணமாக, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் பயணிகள் சென்னை விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்கள், பெங்களூரு, கோவை விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.