வெளிநாட்டு ஊழியருக்கு சொன்ன சம்பளம் கொடுக்காமல் அலைக்கழித்த முதலாளி – சட்டப்படி அணுகி S$13,677 தொகையை வாங்கி அசத்திய ஊழியர்

Migrant worker gets over S$13600 owed salary
Transient Workers Count Too

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் தனது முந்தைய முதலாளி கொடுக்க வேண்டிய சம்பள பாக்கி S$13,677 தொகையை புகார் செய்து பெற்று அசத்தியுள்ளார்.

TADM என்னும் மேலாண்மை முத்தரப்புக் கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊழியருக்கும் அவரது முதலாளிக்கும் இடையிலான முந்தைய சமரச பேச்சுவார்த்தை முதலில் தோல்வியடைந்தது.

லாரியையும் விட்டுவைக்கலயா.. அலேக்கா திருடி சென்ற 3 பேர் – மடக்கிய போலீஸ்

இதனை அடுத்து நடந்த விசாரணையில் வட்டார நீதிமன்றங்களின் வேலைவாய்ப்பு உரிமைகோரல் தீர்ப்பாயம் அவருக்கு இந்தத் தொகையை வழங்கியது.

இது தொடர்பான செய்தியை, வெளிநாட்டு ஊழியர்களின் உரிமைக் குழுவான Transient Workers Count Too (TWC2) நவம்பர் 21 அன்று அதன் இணையதளத்தில் வெளியிட்டது.

பொங்கோலில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் கேன்டீன் கடையில் சமையல்காரராகப் பணியாற்றியவர் திரு நஸ்முல் என்ற ஊழியர்.

அவர் பணியாற்றிய ஓபெய்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முதலாளி நஸ்முலை நேர்மையற்ற முறையில் நடத்தி சம்பளத்தை கொடுக்காமல் இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

சம்பளம் தொடர்பாக புகார்

சம்பளம் தொடர்பாக திரு நஸ்முல் மே மாத நடுப்பகுதியில் TADM கூட்டணியிடம் புகார் செய்தார்.

இதனை அடுத்து, ஊழியருக்கு சொல்லப்பட்ட (fixed) சம்பளம் மற்றும் கூடுதல் நேரம் வேலை செய்ததற்கு எவ்வளவு ஊதியம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை மொத்தமாக கணக்கிட TADM உதவியது.

பொது விடுமுறை நாட்களிலும் வேலை

ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் கூட திரு நஸ்முல் பணிபுரிந்ததாக கூறப்பட்டுள்ளது.

திரு நஸ்முல் கடந்த ஜனவரி 14 அன்று 13,000 குடியிருப்பாளர்கள் வசிக்கும் அந்த வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் உள்ள வங்காளதேச உணவுக் கடையில் சமையல்காரராக வேலை செய்யத் தொடங்கினார்.

தினமும் 12 மணிநேரத்திற்கு மேல் வேலை

திரு நஸ்முல் ஜனவரி முதல் மே வரை, அதாவது ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் உட்பட வாரத்தில் ஏழு நாட்களுக்கு தினமும் 12 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்ததாக சொல்லப்பட்டுள்ளது.

வேலைக்கு சேர்ந்த ஐந்து மாதங்களில், இரு மாத சம்பளங்களை மட்டுமே திரு நஸ்முல் பெற்றுள்ளார். அதாவது மார்ச் மற்றும் ஏப்ரல் மாத சம்பளமாக S$1,200 தொகையை அவர் வாங்கியுள்ளார்.

வேலைவாய்ப்புச் சட்டம்

ஆனால், அவருக்கு அடிப்படை மாத சம்பளம் S$2,800 மற்றும் மாதாந்திர allowance S$200 என்று முன்னர் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ், S$4,500 க்கு கீழ் சம்பளம் வாங்கும் ஒவ்வொரு உடலுழைப்பை போடும் ஊழியர்களுக்கும் கூடுதல் நேர (overtime) ஊதியம் பெற தகுதி உண்டு.

மே மாதத்தின் நடுப்பகுதியில், திரு நஸ்முல் வேலையை முடித்துக்கொண்டு, சம்பளம் முறையாக வரவில்லை என்ற புகாருடன் MOM, TADM மற்றும் பின்னர் TWC2 ஐ அணுகினார்.

இறுதியாக வெற்றி

சில பேச்சுவார்த்தை அமர்வுகள் தோல்வி அடைந்தாலும், இறுதியாக முதலாளி கொடுக்க வேண்டிய சம்பள பாக்கி சுமார் S$13,677 தொகையை ஊழியரிடம் செலுத்தும்படி உத்தரவிடப்பட்டது.

மனிதவள அமைச்சகம் (MOM), தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு ஆகியவை ஒன்றாக சேர்ந்து அமைக்கப்பட்டது தான் TADM.

இது ஊழியர்கள் மற்றும் முதலாளிகளுக்கு இடையிலான சம்பளம் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் வேலை தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் சேவைகளை வழங்குகிறது.

தாயுடன் இறந்து கிடந்த மூன்று வாரங்களே ஆன கைக்குழந்தை – ஒரு மாதத்தில் 2வது சம்பவம்