லாரியையும் விட்டுவைக்கலயா.. அலேக்கா திருடி சென்ற 3 பேர் – மடக்கிய போலீஸ்

lorry stealing 3 men arrested
Google Maps

வாகனம் திருட்டு வழக்கில் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

மார்சிலிங் கிரசென்ட்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரி திருடப்பட்டதாக போலீசாருக்கு புகார் கிடைத்தது.

தாயுடன் இறந்து கிடந்த மூன்று வாரங்களே ஆன கைக்குழந்தை – ஒரு மாதத்தில் 2வது சம்பவம்

அதாவது கடந்த நவ.30 அன்று மாலை 5:20 மணிக்கு பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து அந்த புகார் வந்துள்ளது.

லாரி கதவுகள் பூட்டப்படாமல் இருந்ததாகவும், சாவியும் லாரியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து, உட்லண்ட்ஸ் போலீஸ் அதிகாரிகள் இதை தொடர்புடைய மூவரின் அடையாளங்களை கண்டறிந்து அவர்களை கைது செய்தனர்.

அவர்களுக்கு வயது 16 முதல் 18 க்கு இடைப்பட்டு இருக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

இதையடுத்து திருடப்பட்ட லாரி அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டது.

கடந்த டிச.2-ம் தேதி, 17 மற்றும் 18 வயதுடைய வாலிபர்கள் இருவர் மீது மோட்டார் வாகனம் திருடியதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

மீதமுள்ள 16 வயதுடையவரிடம் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

மலேசியா செல்லும் வெளிநாட்டினர் அனைவரும் MDAC அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்