மலேசியா செல்லும் வெளிநாட்டினர் அனைவரும் MDAC அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்

Foreigners entering Msia must submit digital arrival card
(PHOTO: India in Singapore / Twitter)

மலேசியா செல்லும் வெளிநாட்டினர் அனைவருக்கும் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது அந்நாட்டுக்கு செல்லும் வெளிநாட்டினர் டிச.1, 2023 முதல் டிஜிட்டல் வருகை அட்டையை (Malaysia Digital Arrival Card – MDAC) நிரப்ப வேண்டும்.

இந்திய ஊழியர்களுக்கு அனுமதி… 400க்கும் மேற்பட்ட இந்திய உணவகங்கள் பயன்பெறும்

மலேசியாவின் நிரந்தரவாசிகள், மலேசியா தானியாக்க குடிநுழைவு அனுமதி (Malaysia Automated Clearance System pass) வைத்திருப்பவர்களுக்கு அதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் வழியாக..

மேலும், குடிநுழைவு அனுமதி பெற தேவையின்றி சிங்கப்பூர் வழியாக இடைவழி செல்பவர்கள் அல்லது இடமாற்றம் செய்பவர்களுக்கும் விதிவிலக்குகள் வழங்கப்படுவதாக குடிநுழைவு துறையின் MDAC இணையதளம் தெரிவித்துள்ளது.

வலைத்தளத்தில் MDAC கார்டை நிரப்புவதற்கான இந்த முக்கிய அறிவிப்பை மலேசியாவின் குடிநுழைவுத் துறை டிசம்பர் 1 அன்று பேஸ்புக்கில் வெளியிட்டது.

எப்போது நிரப்ப வேண்டும்?

குறிப்பாக மலேசியா செல்வதற்கு மூன்று நாட்களுக்குள் அந்த MDAC அட்டையை நிரப்பி முடித்திருக்க வேண்டும்.

என்னென்ன விவரங்கள் நிரப்ப வேண்டும்?

அதில் பெயர், தேசியம், பாஸ்போர்ட் விவரங்கள், வருகை மற்றும் புறப்படும் தேதிகள் ஆகியவையை நிரப்ப வேண்டும்.

சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களுக்கு குட் நியூஸ்.. சிங்கப்பூரில் இருந்து மலேசியா.. படையெடுக்கும் கூட்டம்