DBS வங்கியில் இருமுறை பணம் கழிக்கப்பட்ட சம்பவம்; பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பணம் மீண்டும் வரவு.!

DBS customers transaction refunds
Pic: AFP

சிங்கப்பூரில் உள்ள DBS வங்கியில் வாடிக்கையாளர்கள் சிலருக்கு ஒரே பரிவர்த்தனைக்காக இருமுறை பணம் கழிக்கப்பட்ட கோளாறு பற்றி வங்கி நிர்வாகம் நேற்று (19-06-2021) தகவல் வெளியிட்டிருந்தது.

DBS வங்கியில் வாடிக்கையாளர்கள் சிலரின் கணக்குகளில் ஏற்பட்ட கோளாறு முழுமையாக சரி செய்யப்பட்டு, உரிய பணம் திரும்பச் செலுத்தப்பட்டு விட்டதாக அந்த வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு பயணங்கள் மீண்டும் தொடங்க அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்; சுகாதார அமைச்சர்.!

தொழில்நுட்ப கோளாறே இதற்கு காரணம் என்றும், அந்த கோளாறு சரிசெய்யப்பட்டு விட்டு உரிய கணக்குகளுக்கு பணம் முழுமையாக திரும்ப செலுத்தப்பட்டுவிட்டதாக DBS வங்கி நிர்வாகம் முகநூலில் குறிப்பிட்டுள்ளது.

DBS வங்கியில் நடந்த இந்த தவறுக்காக வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ள நிர்வாகம், தனது கட்டமைப்பு பாதுகாப்பானது என்றும் ஊடுருவல் சாத்தியமற்றது என்றும் குறிப்பிட்டுள்ளது.

கட்டண முறையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு பற்றி DBS தகவல் அளித்ததாக சிங்கப்பூர் நாணய வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிங்கப்பூர் நாணய வாரியம் உத்தரவிட்டுள்ளது.

சிங்கப்பூரில் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் மரணத்திற்கு இதுதான் காரணம் – சுகாதார அமைச்சகம் விளக்கம்.!