வெளிநாட்டு பயணங்கள் மீண்டும் தொடங்க அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்; சுகாதார அமைச்சர்.!

Get vaccine all peoples
Pic: MOE

சிங்கப்பூரில் பாதிக்கும் மேற்பட்டோர் COVID-19 தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டுள்ளனர் என்றும், சுமார் 36 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) தெரிவித்துள்ளார்.

இத்தகைய முன்னேற்றம் மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அவர், இவ்வாறு செய்தால் தான் சமூகத்தில் கிருமிப்பரவல் இருந்தாலும் பாதுகாப்பாய் இருக்க முடியும் என சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் மரணத்திற்கு இதுதான் காரணம் – சுகாதார அமைச்சகம் விளக்கம்.!

உணவகங்கள் மற்றும் பானக் கடைகள், உடற்பயிற்சி மையங்கள் போன்றவற்றை திறந்து வைத்திருக்கவும், வெளிநாட்டு பயணங்களை மீண்டும் தொடங்கவும் இன்னும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும், கூடுதல் தடுப்புமருந்துகள் விநியோகிக்கப்படுவதை அரசு உறுதிசெய்யும் என்றும், வாய்ப்பு வரும்பொழுது தடுப்பூசி போட்டுக்கொண்டு, குடும்பத்தினருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிங்கப்பூரில் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் Safe Entry Gateway Check-out கருவிகள்.!