தீபாவளியையொட்டி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இனிப்பு, காரங்கள் அடங்கிய பையை வழங்கிய இந்து அறக்கட்டளை வாரியம்!

Photo: Hindu Endowments Board Official Facebook Page

கடந்த அக்டோபர் 24- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று தீபாவளி பண்டிகையை, சிங்கப்பூரில் இந்தியர்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். பட்டாசுகளை வெடித்தும், புத்தாடைகளை அணிந்தும் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தனர். அத்துடன், ஸ்ரீ சிவன் கோயில், ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில், ஸ்ரீ நிவாச பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்ற நிலையில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

சிங்கப்பூரில் iPhone 14 விற்பனையில் பலே வேலை – இருவர் விமான நிலையத்தில் கைது

லிட்டில் இந்திய கடைக்காரர்கள் மற்றும் இந்திய மரபுடைமை சங்கம் ஆகிய அமைப்புகள், சிங்கப்பூர் வாழ் இந்தியர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடினர்.

இந்த நிலையில், அக்டோபர் 23- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் (Sri Srinivasa Perumal Temple) உள்ள பிஜிபி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 200 இந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு (Hindu migrant workers) ஆடம்பரமான சைவ மதிய உணவு வழங்கப்பட்டது. அத்துடன், ஒவ்வொரு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் தீபாவளி இனிப்புகள் மற்றும் காரங்கள் அடங்கிய பைகளை இந்து அறக்கட்டளை வாரியமும் (Hindu Endowments Board- HEB), ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸும் (Hope Initiative Alliance) வழங்கப்பட்டது.

Photo: Hindu Endowments Board
Official Facebook Page

சிங்கப்பூரில் அக்.10 முதல் காணாமல் போன 12 வயது சிறுவன் என்ன ஆனார்?

இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர்கள் மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஆல்வின் டான் (Alvin Tan, Minister of State for Ministry of Culture, Community and Youth & Ministry of Trade and Industry), புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.