சிங்கப்பூரில் iPhone 14 விற்பனையில் பலே வேலை – இருவர் விமான நிலையத்தில் கைது

Singapore Police Force

சிங்கப்பூரில் தொடர் மின்னனு வணிக மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டதாக சிங்கப்பூர் காவல் படை (SPF) நேற்று (அக் 25) தெரிவித்தது.

அவர்கள் 23 வயது ஆடவர் மற்றும் 25 வயது பெண் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இதில் அவர்கள் ஈ-காமர்ஸ் தளமான Carousellஇல் iPhone-களை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் அக்.10 முதல் காணாமல் போன 12 வயது சிறுவன் என்ன ஆனார்?

அக்டோபர் 1 மற்றும் அக்டோபர் 17 க்கு இடையில் இந்த மோசடி குறித்து பல புகார்களை பெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதில் Carousell இல் iPhone 14 தொடர் மற்றும் iPhone 13 தொடர் மாதிரிகள் போன்ற மொபைல் சாதனங்களின் விற்பனையை விளம்பரப்படுத்திய ஆன்லைன் விற்பனையாளரால் ஏமாற்றப்பட்டதாக புகார் வந்தது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்துக்கு வந்த அவர்கள் நேற்று (அக்.25) கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூரில் BQ.1 மற்றும் BQ1.1 Omicron துணை வகை COVID-19 கிருமிகள் கண்டுபிடிப்பு