சிங்கப்பூரில் வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளியைக் கொண்டாடிய தமிழர்கள்!

Photo: Lisha Official Facebook Official Page

சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டினரில் பெரும்பான்மையானவர்கள் இந்தியவர்கள். இதில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், அதிகளவில் வசித்து வருகின்றனர். அதேபோல், சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் தமிழர்களும் அடங்குவர்.

காரின் மீது பேருந்து மோதல்… தூக்கிவீசப்பட்ட கார் போக்குவரத்து விளக்கு கம்பத்தில் மோதி விபத்து (வீடியோ)

இந்த நிலையில், அக்டோபர் 24- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று தீபாவளி பண்டிகையையொட்டி, சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் தங்கள் குடும்பத்தினருடன் புத்தாடை அணிந்தும், பட்டாசுகளை வெடித்தும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அதைத் தொடர்ந்து, ஒருவருக்கொருவர் இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டனர். மேலும், சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ சிவன் கோயில், ஸ்ரீ மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

ஜூரோங் ஈஸ்ட்டில் தீ விபத்து: வீட்டை உடைத்து உள்ளே புகுந்த தீயணைப்பு வீரர்கள்

தீபாவளியையொட்டி, கோயில்களில் உள்ள சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதனிடையே, சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியன் லூங், அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் சிங்கப்பூர் வாழ் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்திய கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமை சங்கம், இந்திய மரபுடைமை நிலையம் ஆகியவை தீபாவளியையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தது. இதில், தமிழர்கள் மட்டுமின்றி சிங்கப்பூரர்களும் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.