தீபாவளி பண்டிகையையொட்டி, ரயில் நிலையங்களில் சிறப்பு அலங்காரங்கள்!

Photo: Lisha Official Facebook Page

வரும் அக்டோபர் 24- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று தீபாவளி பண்டிகை (Deepavali Festival 2022) கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், இதற்கான தீபாவளி ஒளியூட்டு, கடந்த செப்டம்பர் 16- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியாவில் (Little India) தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை லிசா அமைப்பு (Lisha) செய்துள்ளது. இதில் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்து வருகின்றன.

ஒரே வீட்டை வாடகைக்கு எடுத்து மற்றவர்களுடன் வசிக்க விரும்பும் இளைஞர்கள்! – வீடுகளின் விலை உயர்வால் நிகழும் மாற்றம்

லிட்டில் இந்தியா உள்ளிட்ட முக்கிய சாலைகளில் இசைக்கருவிகள் வடிவிலான வண்ணமின் விளக்குகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர். அத்துடன் புகைப்படங்களையும் எடுத்து மகிழ்கின்றனர்.

Photo: Lisha Official Facebook Page

இந்நிலையில், லிசா அமைப்பு நில போக்குவரத்து ஆணையம் (Land Transport Authority- ‘LTA’), எஸ்பிஎஸ் டிரான்ஸிட் (SBS Transit) , எஸ்எம்ஆர்டி (SMRT) ஆகியவற்றுடன் இணைந்து ரயில்கள், பேருந்துகள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் தீபாவளி வாழ்த்துக்களுடன் கூடிய சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, தீப ஒளியுடன் கூடிய ரங்கோலி கோலங்கள் இடம் பெற்றுள்ளது. இதனை சிங்கப்பூரின் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் நேரில் பார்வையிட்டார். அத்துடன், அலங்கரிக்கப்பட்டுள்ள ரயில் சேவையை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இப்படியும் ஒரு போக்குவரத்துக் காவலர்! – மனவுளைச்சலுக்கு ஆளான சிங்கப்பூர் தம்பதியினர்

லிட்டில் இந்தியா, பெடோக் மற்றும் செராங்கூன் ஆகிய எம்ஆர்டி நிலையங்களிலும், ஆங் மோ கியோ ( Ang Mo Kio), பூன் லே (Boon Lay) ஆகிய ஒருங்கிணைந்த போக்குவரத்து நிலையங்களிலும் (Integrated Transport Hubs- ‘ITH’), இந்த அலங்காரங்களைப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நேரில் கண்டுக்களிக்கலாம்.