நெருங்கும் தீபாவளி பண்டிகை- “திருச்சி, சிங்கப்பூர் இடையேயான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைக்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறு!”

"இந்தியாவில் மேலும் ஒரு நகரத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை... பயணக் கட்டணம் இவ்வளவு தான்"- இண்டிகோ ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு!
Photo: Changi Airport

 

திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே இருமார்க்கத்திலும் தினசரி ஐந்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் (Indigo Airlines) வழங்கி வருகிறது. இதில் ஒரு விமான சேவை மட்டும் நேரடி விமான சேவை ஆகும். மற்ற விமான சேவைகள் அனைத்தும் பெங்களூரு, சென்னை வழியாக இயக்கப்படுகின்றன.

பேருந்து, கார், பைக் மோதி விபத்து: ஊழியருக்கு காயம் – பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்

தற்போது நவராத்திரி, தீபாவளி உள்ளிட்டப் பண்டிகைகள் அடுத்தடுத்து வரவிருக்கும் நிலையில், வரும் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதங்கள் வரையிலான திருச்சி, சிங்கப்பூர் வழித்தடத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்திய கட்டுமான ஊழியர் வேலையின்போது மரணம்.. இரும்பு ஸ்டாண்ட் முறிந்து விழுந்து விபத்து

விமான பயண டிக்கெட் முன்பதிவு, விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு www.goindigo.in என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.