மீண்டும் தீபாவளி ஒளியூட்டு: மின்னொளியில் ஜொலிக்க உள்ள லிட்டில் இந்தியா…!

deepavil light up little india
Lisha

இந்தியாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி.

இந்த தீப ஒளி திருநாளை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் புத்தாடை அணிந்தும், பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிங்கப்பூரின் ‘பாடாங்’ திடலில் எழுப்பிய வீர முழக்கம் – இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் பாரம்பரியம்

அதேபோல், சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் தீபாவளியை ஆண்டுதோறும் மிகச்சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை வந்தாலே சிங்கப்பூர் லிட்டில் இந்தியா முழுவதும் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கும் என்பது நமக்கு தெரிந்த விடயம் தான்.

இந்தாண்டு லிட்டில் இந்தியாவில் இந்தியப் பாரம்பரிய இசைக்கருவிகளைக் கருப்பொருளாகக் கொண்டு ஒளியூட்டு விழா அமையும் என சொல்லப்பட்டுள்ளது.

பர்ச் சாலையில் (Birch Road) வரும் செப்டம்பர் 16ஆம் தேதி சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் ஆதரவோடு தொடக்க விழா நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் பங்கேற்கிறார்.

LISHA Deepavali Utsavam 2019 – Light Up Ceremony and Street Parade

அவருடன் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, சிங்கப்பூருக்கான இலங்கை, ஆஸ்திரேலியா, இந்தியத் தூதர்கள் ஆகியோர் சிறப்பு வருகையாளர்களாக கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக தீபாவளி நிகழ்சிகளை பெரிய அளவில் நடத்த முடியாமல் போனாலும், இந்தாண்டு பொதுமக்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் பல்வேறு நிகழ்சிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளதாக Lishaவின் செயலாளரான ருத்திராபதி கூறினார்.

(Photo: PremStars)

சிங்கப்பூரில் வேலை பிடித்தமாதிரி இல்லை… “எங்களுக்கு வேலையே வேண்டாம்” – ஊழியர்கள் ‘நச்’