நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிங்கப்பூரின் ‘பாடாங்’ திடலில் எழுப்பிய வீர முழக்கம் – இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் பாரம்பரியம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ‘டெல்லி சலோ’ என்று முழங்கிய ‘பாடாங்’ திடல், சிங்கப்பூரின் பாரம்பரிய நினைவுச் சின்னங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்திய தேசிய ராணுவத்தை (INA) மெருகேற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டது நாம் அறிந்தது தான்.

சிங்கப்பூரில் வேலை பிடித்தமாதிரி இல்லை… “எங்களுக்கு வேலையே வேண்டாம்” – ஊழியர்கள் ‘நச்’

அதில் ஒரு பகுதியாக அவர் 1943ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் வந்த நேதாஜி, ‘பாடாங்’ திடலில் சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களை சந்தித்தார்.

அதாவது ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர் எழுப்பிய முழக்கமும் அங்கு தான் இடம் பெற்றது. என்ன அவர் கூறினார் என்றால்? ‘டெல்லி சலோ’ என உணர்ச்சிப் பொங்க அவர் முழக்கமிட்டார்.

ஆகவே, இந்திய நாட்டு மக்களுக்கும் அந்த ‘பாடாங்’ திடலுக்கும் நெருக்கமான முக்கிய பிணைப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன் முதலில் இந்திய சிப்பாய்கள் பாடாங் மைதானத்தில் தான் தங்களுடைய முகாம்களை அமைத்தனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிங்கப்பூரின் பாரம்பரிய நினைவுச் சின்னங்களின் பட்டியலில் ‘பாடாங் திடல்’ சேர்க்கப்பட்டது, இந்திய மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூரோங் ஈஸ்ட்டில் தீ விபத்து… பரிதாபமாக ஒருவர் உயிரிழப்பு