ஜொலிக்கும் சிராங்கூன் சாலை….”தீபாவளி ஓளியூட்டு விழா” தொடர்பான லிஷாவின் அறிவிப்பு!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு
(Photo: S.Iswaran/FB)

 

இந்தியாவில் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. இந்த பண்டிகையை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் புத்தாடை அணிந்தும், பட்டாசுகளை வெடித்தும், அக்கம் பக்கத்தினருக்கு இனிப்புகளை, காரவகை பலகாரங்களை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அதேபோல், சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் தீபாவளியை ஆண்டுதோறும் மிகச்சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

டெலி ஹப் கேட்டரிங் உணவை சாப்பிட்ட 21 பேர் பாதிப்பு – நிறுவனத்துக்கு S$4,000 அபராதம்

அந்த வகையில், சிங்கப்பூரில் உள்ள சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில் நவம்பர் மாதம் 12- ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், “தீபாவளி ஒளியூட்டு விழா- 2023” (Deepavali Light Up Ceremony) வரும் செப்டம்பர் 30- ஆம் தேதி தொடங்கவுள்ளதாக லிட்டில் இந்திய கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமை சங்கம் (LITTLE INDIA SHOPKEEPERS AND HERITAGE ASSOCIATION) என்றழைக்கப்படும் ‘லிஷா’ அறிவித்துள்ளது.

ஜொலிக்கும் சிராங்கூன் சாலை...."தீபாவளி ஓளியூட்டு விழா" தொடர்பான லிஷாவின் அறிவிப்பு!
Photo: LISHA

‘லிஷா’ தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2023 தீபாவளி பண்டிகைக்கான தீபாவளி ஒளியூட்டு தொடக்க விழா வரும் செப்டம்பர் 30- ஆம் தேதி மாலை 06.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை பிர்ச் சாலையில் திறந்தவெளியில் (Birch Road) நடைபெறவுள்ளது. அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு லிஷா அழைப்பு விடுத்துள்ளது.

தீபாவளி ஒளியூட்டையொட்டி, லிட்டில் இந்தியாவில் உள்ள சிராங்கூன் சாலை முழுவதும் வண்ண மின் விளக்குகளுடன் அலங்கார தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் சிராங்கூன் சாலை வண்ண மின் ஒளியில் ஜொலிக்கிறது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் லாரி விபத்துக்கள் யாரால் ஏற்படுகிறது?

தீபாவளி ஒளியூட்டைத் தொடர்ந்து, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும், போட்டிகளுக்கும் லிஷா அமைப்பு ஏற்பாடுகளைச்செய்துள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு லிஷாவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திற்கு செந்தூர் அறிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.