சிங்கப்பூரில் தீபாவளியை முன்னிட்டு MRT ரயில், பேருந்துகளில் வண்ணமிகு அலங்காரங்கள்.!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு
(Photo: S.Iswaran/FB)

சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகையை பிரதிபலிக்கும் வகையில் MRT ரயில்களிலும், பேருந்துகளிலும் வண்ணமிகு அலங்காரங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த அலங்காரங்கள், மொத்தம் 4 ரயில்கள் மற்றும் 10 பேருந்துகளில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஊழியர் மீது கிரேன் விழுந்து விபத்து..!

இதில் குறிப்பாக லிட்டில் இந்தியா ரயில் நிலையம் மற்றும் பூன் லே பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் ஒரு மாத காலம் மயில் உருவ அலங்காரங்கள் இடம் பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த ஐந்து ஆண்­டுக­ளா­க இந்த தீபாவளி வண்ண அலங்கார நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

இந்த முயற்சியை, நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­ய­ம் (LTA), லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள் மற்றும் மர­பு­டைமை சங்­க­மும் (Lisha) இணைந்து செயப்படுத்தி வருகின்றன.

லிட்டில் இந்தியா பகுதியோடு மட்டும் அல்லாது, அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில், அனைத்து சேவைகளிலும் இது விரிவுப்படுத்தப்பட்டதாக Lisha தலை­வர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் படிப்படியான சம்­பள உயர்வு முறை விரைவில் நடைமுறை செய்யப்படலாம்..!

இதையும் படிங்க: வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்பலாம்.!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…