சிங்கப்பூருக்கு செல்லவிருந்த பயணியிடம் கைத்துப்பாக்கி….விமான நிலையத்தில் பரபரப்பு!

சிங்கப்பூருக்கு செல்லவிருந்த பயணியிடம் கைத்துப்பாக்கி....விமான நிலையத்தில் பரபரப்பு!
Photo: Delhi Airport

 

செப்டம்பர் 06- ஆம் தேதி அன்று டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல்- 3ல் சிங்கப்பூருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் பயணிக்கத் தயாராக இருந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை என்றழைக்கப்படும் சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

உக்ரைனுக்கு ஆம்புலன்ஸ்களை வழங்க சிங்கப்பூர் அரசு முடிவு!

அப்போது, பயணிகளின் உடைமைகளை ஸ்கேன் செய்த போது, பயணி ஒருவரின் பேக்கில் நாட்டு கைத்துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த பயணியைத் தனியே அழைத்துச் சென்று சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த பயணியின் பெயர் பரமானந்த தாஸ் என்பதும், அவர் தனது மனைவி, மகனுடன் சிங்கப்பூருக்கு செல்லவிருந்தது தெரிய வந்தது.

சிங்கப்பூரில் இருந்து தங்கத்தைக் கடத்தி வந்த பயணி….விமான நிலையத்தில் அதிரடி காட்டிய சுங்கத்துறை அதிகாரிகள்!

இதையடுத்து, அந்த பயணியை காவல்துறையினரிடம் சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவரிடம் டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக, விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.