ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாத பயணிகளை அடையாளம் காண புதிய செயல்முறை.!

Detecting passangers without mask
Pic: SBS Transit

ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாத பயணிகளை அடையாளம் காணக்கூடிய வகையில், வீடியோ பகுப்பாய்வு அமைப்பு மூலம் புதிய காண்காணிப்பு செயல்முறையை SBS Transit நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் வடகிழக்கு ரயில் தடத்தின் ஐந்து நிலையங்களில் காண்காணிப்புச் செயல்முறை செயல்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேவையுள்ளோர் பயன்படுத்திக்கொள்ள இலவச மளிகை, உணவு பொருட்கள்…

இந்த கண்காணிப்பு செயல்முறை மூலம், முகக்கவசம் அணியாத பயணிகள், பயணிகள் விட்டுச்செல்லப்பட்ட உடைமைகள், பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய அம்சங்கள் ஆகியவற்றை அடையாளம் காண முடியும் என கூறப்பட்டுள்ளது.

ஊட்ரம் பார்க் (Outram Park) , சைனாடவுன் (Chinatown), டோபி காட் (Dhoby Ghaut), லிட்டில் இந்தியா, சிராங்கூன் ஆகிய நிலையங்களில் கண்காணிப்புச் செயல்முறை செயல்படுத்தப்பட உள்ளது.

கண்காணிப்புச் செயல்முறையானது ஊழியர்களின் ரயில் நிலையக் கண்காணிப்பு பணிகளுக்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த ஆண்டு Downtown தடத்தில் உள்ள ரயில் நிலையங்களுக்கும் கண்காணிப்பு செயல்முறையை நீட்டிக்க SBS Transit நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சிங்கப்பூரில், 8 மணிநேரம் தூங்குவதற்கு S$1,500 சம்பளம் – வேலை ரெடி!!