சிங்கப்பூரில் உணவகங்களில் நடைமுறைக்கு வரும் புதிய உத்தரவு: மீறினால் S$2,000 வரை அபராதம்!

diners clear food courts
Pic: Nuria Ling/TODAY

சிங்கப்பூரில் உள்ள உணவகங்கள், காபி கடைகளில் சாப்பிட்ட பின்னர், தாங்கள் பயன்படுத்திய தட்டுகளை அதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள அடுக்கு நிறுத்தங்களில் வைக்கும் விதிமுறை கடந்த ஜூன் 01 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

அதன்படி, காபி கடைகள் மற்றும் உணவகங்களில் சாப்பிடுவோர்கள் தங்கள் பயன்படுத்திய தட்டுகள், கரண்டிகள், குப்பை ஆகியவற்றை அவர்களே அப்புறப்படுத்த வேண்டும். இந்த நடைமுறை தற்போது கட்டாயமாக்கப்பட உள்ளது.

“சமூகத்துடன் ஒன்றிணைய வெளிநாட்டினர்கள் சிங்கப்பூரினைப் புரிந்து நடந்துக்காெள்ள வேண்டும்”

இந்த புதிய நடைமுறை குறித்து, ஆகஸ்ட் 31ம் தேதி வரை அதிகாரிகள் நினைவூட்டுவார்கள் என்றும், அந்த காலப்பகுதிகளில் உணவுத் தட்டுகளை அதற்கென உள்ள அடுக்கு நிறுத்தத்தில் கொண்டு போய் வைக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் இந்த புதிய உத்தரவுக்கு தங்களைத் தயார்ப்படுத்த விதிவிலக்கு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், செப்டம்பர் 1ம் தேதி முதல் உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த மே 14ம் தேதி வாரியம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது இந்த புதிய விதிகளை பின்பற்ற பொதுமக்களுக்கு 2 மாத காலம் அவகாசம் வழங்கப்படும் என்றும், ஜனவரி 01, 2022 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) மற்றும் சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA)
நேற்று (ஆகஸ்ட் 30) கூட்டாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

குறைந்த வருமான தொழிலாளர்கள் இரண்டு ஆண்டுக்குள் மேம்படுத்தப்பட்ட சம்பளம் பெறுவர்!

நவம்பர், டிசம்பர் மாதங்களில் புதிய விதிமுறை குறித்து பொதுமக்களுக்கு நினைவூட்டப்படும் இந்த உத்தரவை முதல் தடவை மீறுவோருக்கு எழுத்து மூலமாக எச்சரிக்கை விடுக்கப்படும். இரண்டாவது முறை மீறுவோருக்கு S$300 அபராதம் விதிக்கப்படும். அதன் பின்பும் தொடர்ந்து உத்தரவை மீறுவோருக்கு எதிரான அபராதத் தொகை S$2,000 வரை கூடிக்கொண்டே போகும் என கூறப்பட்டுள்ளது.

உணவகங்களில் தட்டுகளை உரிய இடத்தில் கொண்டு வைக்க சுமார் 150 புதிய கட்டமைப்புகளை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக தேசிய சுற்றுப்புற அமைப்பு கூறியுள்ளது.