சிங்கப்பூரில் உணவகங்களில் குழுவாக இருவர் அமர்ந்து சாப்பிட அனுமதி.!

Dining resume two persons
Pic: shawnanggg/Unsplash

சிங்கப்பூரில் சமூக அளவில் கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் குறைந்து வரும் நிலையில், சில கட்டுப்பாடுகள் கடந்த திங்கட்கிழமை (14-06-2021) முதல் தளர்த்தப்பட்டன.

முகப்பராமரிப்பு, நீராவிக் குளியல், மசாஜ் பார்லர்கள் போன்ற முகக்கவசம் பயன்படுத்த முடியாத சேவைகள் மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சிங்கப்பூரில் வருகின்ற 21ம் தேதி முதல் உணவு மற்றும் பானக் கடைகளில் இருவர் குழுவாக அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற டேபிள்களில் உள்ளவர்களோடு சேரக்கூடாது.

பேருந்து சேவை தொடர்பான எஸ்.எம்.ஆர்.டி.யின் அறிவிப்பு!

உணவு மற்றும் பானக் கடைகளில் அமர்ந்து சாப்பிடுவோர் 1 மீட்டர் இடைவெளியைப் கடைபிடிக்க வேண்டும், சாப்பிடும் நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

உணவகங்களில் சத்தமாக பேசுவதற்கும், இசையை ஒலிக்க விடுவதற்கும் அனுமதி இல்லை. அந்த இடங்களில் காணொளிகளைக் காட்டுவதற்கும், நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்று பரவலை கட்டுப்படுத்தவே அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழு அறிவித்துள்ளது.

மேலும், உணவகங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருமித்தொற்று பரவல் குறைந்து, நிலைமை மேம்பட்டால் அடுத்த மாத நடுப்பகுதியிலிருந்து அதிகபட்சம் ஐந்து பேர் வரை குழுவாக அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் அதிகமான மக்கள் வசிக்கும் வட்டாரம் எது தெரியுமா.?