“லிட்டில் இந்தியா வண்ணமயமான விளக்குகள், அலங்காரங்களால் நிரம்பியுள்ளது”- அதிபர் ஹலிமா யாக்கோப்!

Photo: Singapore President Official Facebook Page

வரும் நவம்பர் 4- ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள் உள்ளிட்டோர் புத்தாடைகள், பட்டாசுகள், வீட்டிற்கு தேவையான பொருட்களைக் கடைகளுக்கு சென்று வாங்கிச் செல்கின்றன. குறிப்பாக, தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால், பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் பொதுமக்கள் அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

ஐ.நா. பொதுச்சபையின் மியான்மர் நாட்டுக்கான புதிய தூதருடன் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சந்திப்பு!

தீபாவளி பண்டிகை காரணமாக, லிட்டில் இந்தியா உள்ளிட்ட கடை வீதிகள் களைக்கட்டியுள்ளது. முக்கிய கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும், அவர்கள் கடைகளுக்கு சென்றுப் பொருட்களை எளிதாக வாங்கவும், அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், அரசின் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றிக் கடை வீதிகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ள வேண்டும் என்று பொதுமக்களை சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு சிங்கப்பூரில் அதிகரித்து வந்த போதிலும், பொதுமக்கள் அரசின் விதிமுறைகளைக் கடைபிடித்து தீபாவளியை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றன.

சிங்கப்பூரில் 5,000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு!

இந்நிலையில் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “இன்னும் ஒரு வாரத்தில் நமது இந்து நண்பர்கள் தீபாவளியைக் கொண்டாடவுள்ளனர். கோவிட்-19 தொற்றுநோய் காரணமாகக் கொண்டாட்டங்கள் குறைக்கப்பட்டாலும், லிட்டில் இந்தியா தீபாவளிக்கான வண்ணமயமான பிரகாசமான விளக்குகள் மற்றும் அலங்காரங்களால் நிரம்பியுள்ளது. விழாவைக் கொண்டாடுபவர்கள் மத்தியில் பண்டிகை உற்சாகம் மிளிரும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.