ஐ.நா. பொதுச்சபையின் மியான்மர் நாட்டுக்கான புதிய தூதருடன் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சந்திப்பு!

Photo: Minister Vivian Balakrishnan Official Facebook Page

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை என்றழைக்கப்படும் ஐ.நா. பொதுச்சபைக்கான மியான்மர் நாட்டுக்கான புதிய தூதராக டாக்டர் நூலீன் ஹேசர் (Dr Noeleen Heyzer) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்தவர் ஆவர்.

கேரளா முதல் சிங்கப்பூர் வரை சைக்கிளில் செல்லும் இளைஞர்!

இந்த நிலையில், ஐ.நா.வுக்கான மியான்மர் நாட்டு தூதராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் நூலீன் ஹேசரை இன்று (28/10/2021) சிங்கப்பூரில் நேரில் சந்தித்துப் பேசினார் சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்.

இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “ஐ.நா.வுக்கான மியான்மரின் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் நூலீன் ஹேசரை சந்திப்பதில் மகிழ்ச்சி. டாக்டர் ஹேசர் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஒரு நீண்ட மற்றும் புகழ்பெற்ற வாழ்க்கையைக் கொண்டுள்ளார். அவரை நான் வாழ்த்தினேன். மியான்மரில் நிலைமையை அமைதியான முறையில் தீர்க்க அவருக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் 5,000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு!

மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், மியான்மர் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், சிங்கப்பூர் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.