கேரளா முதல் சிங்கப்பூர் வரை சைக்கிளில் செல்லும் இளைஞர்!

உலகை கொரோனா வைரஸ் என்ற பெருந்தொற்று ஆட்டிப்படைத்து வருகிறது. தற்போது, கொரோனா ஒழிக்கும் ஆயுதமான கொரோனா தடுப்பூசி மருந்து வெற்றிகரமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு தடுப்பூசியை செலுத்தும் பணியானது உலகம் முழுவதும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு குறித்த சுகாதாரத்துறை அமைச்சகத்தின் விரிவான தகவல்!

இருப்பினும், பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசியை 75%-க்கும் அதிகமான மக்களுக்கு செலுத்தியிருந்தாலும் கூட, கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் பொருளாதார ரீதியிலாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் ஒருபுறம் மனிதர்களின் உயிரைப் பழிவாங்கினாலும், மற்றொரு புறம் மனிதர்களின் வாழ்க்கை முறையை மாற்றியுள்ளது என்றால் மிகையாகாது. அதில், குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், உலகம் முழுவதும் உள்ள மக்கள் தற்போது உணவு பழக்கங்கள், யோகா, உடற்பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. மேலும், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை நாள்தோறும் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் சைக்கிளிங் செல்வது அதிகரித்துள்ளது.

விடுதி வெளிநாட்டு ஊழியர்களும், பண்டிகை கொண்டாட்டமும்…

சைக்கிளிங் செல்வதால் உடலுறுப்புகள் அனைத்திலும் ரத்த ஓட்டம் சீராக செல்கிறது. மேலும், உடலுக்கு தேவையான வலுவை அளிக்கிறது. அத்துடன் உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. சிங்கப்பூரில், சைக்கிளிங் செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் உள்ளிட்டவையையும் எடுத்துக் கொள்கின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு திறன் அதிகம் உள்ளவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவ வாய்ப்பு குறைவு என்று டாக்டர்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கேரளாவில் இருந்து சிங்கப்பூருக்கு சைக்கிளில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான பயண திட்டத்தில் SIA, Scoot விமான சேவைகள் விரிவு

இன்ஸ்டாகிராமில் ‘Faizal_outlaw’ என்ற பெயரில் பக்கத்தைத் தொடங்கியுள்ள, அந்த இளைஞர் தான் செல்லும் பாதை, தான் எந்த இடத்தில் இருக்கிறேன் போன்ற விவரங்களுடன் புகைப்படத்தையும் பதிவிட்டு வருகிறார். அதன்படி, கேரளா மாநிலத்தில் இருந்து தனது சைக்கிள் பயணத்தைத் தொடங்கிய, அந்த இளைஞர் இதுவரை 2,000 கிலோ மீட்டரைக் கடந்து பயணத்தைத் தொடர்கிறார். உத்தரகாண்ட், இமாச்சல்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக லடாக் யூனியனில் உள்ள உம்ளிங் லா (UMLING LA) என்ற இடத்தை அடைந்துள்ளார். இது மிக உயரமான மலைத்தொடர் ஆகும். நேபாளம், தாய்லாந்து, மியான்மர், மலேசியா ஆகிய நாடுகள் வழியாக சிங்கப்பூருக்கு வருகிறார். கேரளா முதல் சிங்கப்பூர் வரை சைக்கிளில் பயணம் செய்ய வேண்டிய தொலைவு 7,447 கிலோ மீட்டர் ஆகும்.

வழிநெடுகிலும் அந்த இளைஞர் இயற்கை அழகை புகைப்படம் எடுத்தும் பதிவிட்டும் வருகிறார். கேரளாவில் இருந்து சிங்கப்பூருக்கு ஒரு இளைஞர் சைக்கிளில் செல்வது பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.