சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு குறித்த சுகாதாரத்துறை அமைச்சகத்தின் விரிவான தகவல்!

Pic: File/Today

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (26/10/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (26/10/2021) மதியம் நிலவரப்படி, புதிதாக 3,277 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. உள்நாட்டில் சுமார் 3,272 பேருக்கு உறுதியாகியுள்ளது. இதில் சமூக அளவில் 2,984 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் 288 பேருக்கும் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகள் 5 பேருக்கும் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,79,095 ஆக உயர்ந்துள்ளது.

விடுதி வெளிநாட்டு ஊழியர்களும், பண்டிகை கொண்டாட்டமும்…

கொரோனா நோய்த்தொற்றால் மேலும் 10 பேர் உயிரிழந்ததால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 339 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலானோர் முதியவர்கள் என்பது நினைவுக்கூறத்தக்கது. தற்போது, நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 1,787 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றன. இதில் ஆக்சிஜன் உதவியுடன் 289 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 146 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றன.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் மிகப்பெரிய பேருந்து & ரயில்களுக்கான பராமரிப்பு மையம் விரைவில்…

சர்வதேச எல்லைக் கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் அரசு தளர்த்தி வரும் நிலையில், சிங்கப்பூரில் உள்ள அனைத்து தரப்பினரும் கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டிருந்தாலும் கூட, முகக்கவசம் அணிதல்; சமூக இடைவெளியைப் பின்பற்றுதல்; கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.