சிங்கப்பூரில் மிகப்பெரிய பேருந்து & ரயில்களுக்கான பராமரிப்பு மையம் விரைவில்…

Photo: The Indepentant

வருகின்ற 2024ம் ஆண்டில் கட்டிமுடிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட சிங்கப்பூரின் மிகப்பெரிய ரயில் மற்றும் பேருந்து பராமரிப்பு மையம் கோவிட்-19 தொற்றுப் பரவலினால் தாமதமடைந்துள்ளது.

சிங்கப்பூரின் மிகப்பெரிய ரயில் மற்றும் பேருந்து பராமரிப்புச் மையம், சிங்கப்பூரின் சாங்கி பகுதியில் கட்டப்படுகிறது. இக்கட்டுமானப் பணிகள் விரைவில் வருகின்ற 2025ம் ஆண்டிற்குள் நிறைவுபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தனிமைப்படுத்தல் இல்லாமல், தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான பயணம் மேலும் இரு நாடுகளுக்கு விரிவு

சாங்கி ரோடு ஈஸ்டு பகுதியில் 36 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் ரயில் மற்றும் பேருந்துகளுக்கான இந்த ஒருங்கிணைந்த பராமரிப்பு மையம் கட்டப்படுகிறது.

கிழக்கு மற்றும் மேற்கு ரயில் பாதையில் செல்லும் ரயில்கள் நிறுத்தி பராமரிப்பதற்காக சுமார் 2 மில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்பளவில் இப்பராமரிப்பு மையம் கட்டப்படுகிறது.

இப்பராமரிப்பு மையத்தில் 700க்கும் மேற்பட்ட பேருந்துகளையும், 3 ரயில் பாதைகள் வழியாக வந்து செல்லும் 200க்கும் மேற்பட்ட ரயில்களையும் நிறுத்தி பராமரிக்க இயலும். அத்தகைய பெரும் வசதிகளுடன் இப்பராமரிப்பு மையம் கட்டப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரின் இந்த மிகப்பெரிய ரயில் மற்றும் பேருந்து பராமரிப்புச் மையம் 3 மாடிக் கட்டிடங்களைக் கொண்டு அமைக்கப்பட்டு வருகிறது. இதில் கிட்டதட்ட 2 மாடிகளின் கட்டிட பணிகள் ஏற்கனவே வெற்றிகரமாக முடிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் சாங்கியில் கட்டப்படும் இப்பராமரிப்பு மையத்தின் முழுமையான கட்டுமானப் பணிகளைப் பற்றி சிங்கப்பூரின் போக்குவரத்து ஆணையம் தெளிவான தகவல்களை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘தீபாவளியை முன்னிட்டு, இந்திய பொருட்கள் அனைத்தும் இந்திய விலைக்கே’- மைஇந்தியா நிறுவனம் அறிவிப்பு!