சிங்கப்பூரில் 5,000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு!

Photo: Ooi Boon Keong/TODAY)

சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல்முறையாக கொரோனாவால் தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000- ஐ கடந்துள்ளது. இது பொதுமக்களை சற்று அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரளா முதல் சிங்கப்பூர் வரை சைக்கிளில் செல்லும் இளைஞர்!

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (27/10/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (27/10/2021) மதியம் நிலவரப்படி, மேலும் 5,324 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 5,312 பேருக்கு நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதில் சமூக அளவில் 4,651 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 661 பேருக்கும், வெளிநாட்டு பயணிகள் 12 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,84,419 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் மேலும் 10 உயிரிழந்தனர். சிங்கப்பூரில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 349 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 1,777 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றன. இதில் 308 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 142 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றன.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இந்திய ஊழியர்களை பெரிதும் சார்ந்துள்ள நிறுவனங்கள் – கட்டுப்பாடுகள் தளர்வுக்கு மகிழ்ச்சி

சிங்கப்பூரில் 80%- க்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவது, பொதுமக்களுக்கு கவலையை அளித்துள்ளது.