தீபாவளியையொட்டி, பேருந்து சேவைத் தொடர்பான எஸ்பிஎஸ் நிறுவனத்தின் அறிவிப்பு!

Photo: SMRT BUS WIKIPEDIA

சிங்கப்பூரில் பொது போக்குவரத்து சேவையை வழங்கும் நிறுவனங்களில் முக்கிய நிறுவனமாக திகழ்கிறது எஸ்பிஎஸ் டிரான்ஸிட் போக்குவரத்து நிறுவனம். இந்த நிறுவனம் பேருந்து மற்றும் ரயில் சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் பயண சேவையை நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றன. அதேபோல், விழாக்காலங்களில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்வார்கள் என்பதால், அந்த குறிப்பிட்ட நாட்களில் மட்டும், குறிப்பிட்ட வழித்தடங்களில் எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனம் (SBS Transit) சிறப்பு பேருந்து சேவையை வழங்கி வருகிறது.

“சொந்த நாடுகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது மகிழ்ச்சி, இருப்பினும் சில சவால்கள் இருக்கின்றன” – வெளிநாட்டு ஊழியர்கள்

அந்த வகையில், வரும் நவம்பர் 4- ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், லிட்டில் இந்தியா உள்ளிட்ட முக்கிய கடை வீதிகள் வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கிறது. மேலும், பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கடைகளுக்கு சென்று ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவையை வாங்கி செல்கின்றன. இதனால் சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகை களைக்கட்டியுளளது.

இந்த நிலையில், எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அக்டோபர் 30, 31 ஆகிய தேதிகளிலும், நவம்பர் 4- ஆம் தேதியும் காலை 07.00 AM மணி முதல் மாலை 05.00 PM மணி வரை 405 எண் கொண்ட பேருந்து சேவை (Service 405) வழங்கப்படும். பூன் லே இன்டர்சேஞ்ச் (Boon Lay Interchange) முதல் ஓல்ட் சோ சூ காங் ரோடு (Old Choa Chu Kang Road) இடையே பேருந்து இயக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் புதிதாக பெரிய தொற்றுநோய் குழுமம் அடையாளம்

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு வாடிக்கையாளர் தொலைபேசி எண் 1800-287-2727 அல்லது www.sbstransit.com.sg என்ற இணையதள பக்கத்திற்கு சென்று அறிந்துக் கொள்ளலாம்.