சிங்கப்பூரில் புதிதாக பெரிய தொற்றுநோய் குழுமம் அடையாளம்

Pic: Melvin Yong/FB

சிங்கப்பூரில் பெரிய தொற்றுநோய் குழுமம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

இன்ஸ்டிடியூட் ஆப் மென்டல் ஹெல்த் (IMH) மருத்துவமனையில் அந்த பெரிய குழுமம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அங்கு 116 பேருக்கு புதிதாக COVID-19 தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது என்று MOH கூறியுள்ளது.

குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து திரும்புபவர்கள் தனிமை உத்தரவை முதலாளியின் வசிப்பிடத்தில் நிறைவேற்ற அனுமதி

COVID-19 பாதிப்புகளில் 108 பேர் உள்நோயாளிகள் என்று கூறியுள்ளது.

மேலும், உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளர் அமைப்புகளைச் சேர்ந்த எட்டு ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக IMH திங்கள்கிழமை (அக்டோபர் 25) இரவு கூறியது.

அதன் பிறகு இது சுகாதார அமைச்சகத்தால் (MOH) ஒரு பெரிய குழுமமாக அடையாளம் காணப்பட்டது.

உள்நோயாளிகள் பெரும்பாலும் பிளாக்ஸ் 4, 5 மற்றும் 6 ஆகிய மூன்று பிளாக்குகளில் இருப்பதாகவும், குழுமத்தில் உள்ள பெரும்பாலான கோவிட்-19 நோயாளிகள் நீண்ட காலம் தங்கியிருப்பவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பில் வலம் வரும் போலி செய்திகள்!