சிங்கப்பூரில் 20 பூனைகள் இறப்பு – என்ன காரணம்?

dogs-attack-kill-cats-amk-hougang-seletar/
Liqiong

சிங்கப்பூரில் சில மாதங்களாக சுற்றித் திரியும் சுமார் 20 பூனைகள் இறந்து போனதாக செய்திகள் வெளியானது.

அதாவது அந்த பூனைகள், ஆங் மோ கியோ, சிலேத்தர் மற்றும் ஹௌகாங் பகுதியில் சுற்றித் திரியும் நாய்களால் தாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

மாதச் சம்பளம் S$1,400 – பகுதி நேர சம்பளம் S$9… இந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – 1,900 நிறுவனங்களுக்கு அங்கீகாரம்

பல்வேறு தோட்டங்களில் உள்ள பூனைக்கு உணவளிக்கும் நபர்கள் இந்த சம்பவங்களை கண்டுபிடித்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

உணவளிக்கும் அவர்கள் இறந்த பூனைகளின் சடலங்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

ஆங் மோ கியோ மற்றும் ஹௌகாங், லிகியோங்கில் உள்ள பூனைக்கு உணவளிக்கும் நபர்கள், தேசிய பூங்கா வாரியம் (NParks) மற்றும் பிற அரசு சாரா விலங்குகள் நலக் குழுக்களிடம் இந்த பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பிய பிறகு இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நாய் தாக்குதல்கள் காரணமாக அந்த பூனைகள் இறந்திருக்கலாம் என அவர்கள் மதர்ஷிப்பிடம் தெரிவித்துள்ளனர்.

Cross Island Line ரயில் பாதையின் முதற்கட்ட கட்டுமான பணிகள் இனிதே தொடக்கம்