கடல் உணவுகளை வாங்க பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் – சிங்கப்பூர் உணவு அமைப்பு

(Photo: Joshua Lee)

கடல்வாழ் உணவுகளை வாங்குவதற்கு பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) வலியுறுத்தியுள்ளது.

ஜூராங் மீன் வர்த்தக துறைமுகம் ஜூலை 31 வரை மூடப்படும் என்று சுகாதார அமைச்சகம் அறிவித்ததை அடுத்து இந்த அறிவிப்பை SFA பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டில் தடுப்பூசி போட்டவர்களுக்கு நற்செய்தி.!

ஜுராங் மீன் வர்த்தக துறைமுகத்துடன் தொடர்புடைய கோவிட் -19 நோய்த்தொற்று பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதனை அடுத்து, கிருமிநீக்கம் செய்வதற்காக இரண்டு வாரங்களுக்கு துறைமுகத்தை மூட சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வழங்கியது.

இந்த அறிவிப்பால், கடல் சார்ந்த உணவு விநியோகத்தில் இடையூறு ஏற்படுவது குறித்து நுகர்வோர் கவலைப்படக்கூடும் என்று SFA தெரிவித்துள்ளது.

கடல்வாழ் உணவு விநியோகத்தில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க, மீன் வர்த்தக சங்கங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட வணிகர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் போன்ற பங்குதாரர்களுடன் SFA நெருக்கமாக செயல்படுகிறது.

கடல் உணவு இறக்குமதியை மாற்று இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக SFA தெரிவித்துள்ளது.

இருப்பினும், பதப்படுத்தப்பட்ட மற்றும் குளிரூட்டப்பட்ட கடல் உணவு வகைகள் கிடைக்கும் என்றும் அது கூறியுள்ளது.

போலீசிடம் தகராறு செய்த ஆடவரை மின் அதிர்வு துப்பாக்கி மூலம் சுட்டுப்பிடித்த அதிகாரிகள் – காணொளி