சிங்கப்பூரில் 10 பெரிய தொற்று குழுமங்கள் கண்காணிப்பு – அதில் 8 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள்

Tuas Avenue 1 dormitory migrant workers
(Photo: AFP/Roslan Rahman)

சிங்கப்பூரில் தற்போது 10 பெரிய கிருமித்தொற்று குழுமங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதில் எட்டு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் அடங்கும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் 818 குடியிருப்பாளர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு மற்றும் மரணங்கள்

மேலும், பாசிர் பஞ்சாங் மொத்த விற்பனை நிலையம், மற்றும் ஒரு நர்சிங் இல்லம் ஆகியவற்றை உன்னிப்பாகக் கண்காணிப்பதாக MOH தெரிவித்துள்ளது.

21 புதிய பாதிப்புகளுடன் , ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள Blue Stars தங்கும் விடுதி மிகப்பெரிய குழுமமாக உள்ளது. அங்கு மொத்தம் 442 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

தங்கும் விடுதிகளில் பதிவான அனைத்து சம்பவங்களும் உள்-விடுதிக்குள்ளே பரவியதாகவும், விடுக்கும் வெளியே இருந்து பரவுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் MOH தெரிவித்துள்ளது.

முழு பட்டியல்

MOH

 

ஊழியர்களை ஏற்றிசென்ற லாரி டாக்ஸியில் மோதி விபத்து – காணொளி