சிங்கப்பூரில் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு மற்றும் மரணங்கள்

Photo: Ooi Boon Keong/TODAY)

சிங்கப்பூரில் நேற்றைய (அக்டோபர் 1) நிலவரப்படி, மேலும் 8 பேர் கிருமித்தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அவர்களில் ஏழு பேர் சிங்கப்பூர் ஆண்கள் மற்றும் ஒருவர் சிங்கப்பூர் பெண்.

ஊழியர்களை ஏற்றிசென்ற லாரி டாக்ஸியில் மோதி விபத்து – காணொளி

அவர்கள் 66 முதல் 96 வயதுக்கு உட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதில் 4 பேர் கோவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றும் MOH தெரிவித்துள்ளது.

மேலும் 4 பேர் முதல் டோஸ் அல்லது முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.

அவர்கள் அனைவருக்கும் பல்வேறு அடிப்படை மருத்துவ பிரச்சனைகள் இருந்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் தொற்றால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை இப்போது 103ஆக உள்ளது.

சிங்கப்பூரில் நேற்று (அக்டோபர் 1) ​​வரை புதிதாக 2,897 பேருக்கு கோவிட் -19 பாதிப்பு பதிவாகியுள்ளது.

வேன் மீது மோதி விபத்தில் சிக்கிய ஆடவர் – உதவிக்கு ஆம்புலன்ஸை அழைத்த ஆப்பிள் வாட்ச்