தங்கும் விடுதியில் 63 பேருக்கு தொற்று பாதிப்பு – புதிய குழுமம் அடையாளம்

(Photo: Roslan RAHMAN / AFP)

சிங்கப்பூரில் நேற்று (செப். 13) புதிதாக 597 பேருக்கு உள்ளூர் அளவில் தொற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

அவற்றில் 63 பேர் தங்கும் விடுதியில் பாதிக்கப்பட்டதாக அமைச்சின் (MOH) புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

விடுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் தளர்வு – மகிழ்ச்சி தெரிவிக்கும் இந்திய ஊழியர்கள்!

மேலும், சமூக அளவில் 534 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவெரி லாட்ஜ் (Avery Lodge Dormitory) தங்கும் விடுதியில் மற்றொரு புதிய குழுமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அங்கு மொத்தம் 58 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய உள்ளூர் பாதிப்புகளில், 157 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்த 10 பேர் புதிய பாதிப்புகளில் அடங்குவர்.

சிங்கப்பூரில் பதிவான மொத்த (உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்) நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 607ஆக உள்ளது.

விடுமுறைகளில் வேலை செய்யக்கூடாது… மீறும் கட்டுமானத் தளங்களில் வீடியோ கண்காணிப்பு