விடுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் தளர்வு – மகிழ்ச்சி தெரிவிக்கும் இந்திய ஊழியர்கள்!

இந்திய ஊழியர்கள் உட்பட மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்: உயிர்போக காரணமாக இருந்த 3 பேருக்கு சிறை
(Photo: TODAY)

தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் நடமாடும் கட்டுப்பாடுகள் சோதனை முறையாக தளர்த்தப்பட்டுள்ளது. இந்த பைலட் திட்டத்தை வெளிநாட்டு ஊழியர்கள் வரவேற்றுள்ளனர்.

அந்த கட்டுப்பாடு தளர்வு நேற்று செப்டம்பர் 13 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று MOM அறிவித்த நிலையில், அது தற்போது நடைமுறையில் உள்ளது.

விடுமுறைகளில் வேலை செய்யக்கூடாது… மீறும் கட்டுமானத் தளங்களில் வீடியோ கண்காணிப்பு

சிங்கப்பூரில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர். மேலும், கோவிட் -19 பரவுவதை பரிசோதித்து, கண்டறிந்து அதனை கட்டுப்படுத்த பல அடுக்கு சோதனை முறையை செயல்படுத்தியுள்ள நிலையில், இப்போது தங்குமிடத்தில் பரவும் கிருமிகளை கையாளத் தயாராக இருப்பதாகவும் MOM கூறியுள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகள், தங்கும் விடுதியிலேயே ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் அவர்கள் கடுமையாக மனஉளைச்சலுக்கு ஆளானார்கள்.

இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்ட 500 ஊழியர்கள் ஒவ்வொரு வாரமும் ஆறு மணி நேரம் லிட்டில் இந்தியா செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் MOM கூறியுள்ளது.

இந்த அறிவிப்பு வெளிநாட்டு ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஒன்றரை வருடங்கள் கழித்து எங்கள் சொந்தங்களை நாங்கள் பார்க்க போகிறோம்” என்றும் திரு. ராமு என்ற ஊழியர் மகிழ்ச்சியுடன் செய்தியிடம் கூறியுள்ளார்.

“நாங்கள் தடுப்பூசி போட்டுகொண்டுள்ளோம், இதனால் நாங்கள் வெளியில் சென்றால் பாதிப்பு இருக்காது” என்று திரு. தனபால் என்ற தமிழ்நாட்டு ஊழியர் செய்தியிடம் கூறியுள்ளார்.

இந்த நடமாட்ட அளவை எவ்வாறு பாதுகாப்பான முறையில் விரிவுபடுத்துவது என்பதை ஒரு மாதத்திற்குப் பிறகு MOM மறுஆய்வு செய்யும் என்றும் கூறியுள்ளது.

பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவருக்கு 24 வாரங்கள் சிறைத் தண்டனை!