விடுமுறைகளில் வேலை செய்யக்கூடாது… மீறும் கட்டுமானத் தளங்களில் வீடியோ கண்காணிப்பு

workplace injury compensation-limits update mom
(Photo by Roslan RAHMAN / AFP)

சிங்கப்பூரில் 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து கட்டுமான தளங்களில் வீடியோ கண்காணிப்பு சாதனங்களை நிறுவ வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ள கட்டுமான தளங்களின் ஒப்பந்ததாரர்கள் கேமராக்களை அமைக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவருக்கு 24 வாரங்கள் சிறைத் தண்டனை!

ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் 150 மீட்டர் சுற்று வட்டாரத்திற்குள் அமைந்துள்ள கட்டுமானத் தளங்களில் வேலை செய்வதைத் தடைசெய்ய அதிகாரிகள் இந்த நடவடிக்கை அமல்படுத்த உள்ளனர்.

இந்த மாற்றம் சுற்றுசூழல் பாதுகாப்பு, நிர்வாகச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களில் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரைச்சலைக் கட்டுப்படுத்த இந்த திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இவை அனைத்தும் ஒப்பந்ததாரரின் சொந்த செலவில் செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வார் மெமோரியல் பார்க்கில் ஷர்ப்போர்ட் மூலம் உலாவிய ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு