பிரம்மாண்ட ‘டிரோன் ஷோ’-வைக் கண்டு வியந்த சிங்கப்பூரர்கள்!

பிரம்மாண்ட 'டிரோன் ஷோ'-வைக் கண்டு வியந்த சிங்கப்பூரர்கள்!
Photo: Fasiha Nazren

 

சீனப் புத்தாண்டையொட்டி, சிங்கப்பூரில் உள்ள மரினா பே சாண்ட்ஸ் (Marina Bay Sands) பகுதியில் ‘The Legend of the Dragon Gate’ என்ற பிரம்மாண்ட டிரோன் ஷோ நிகழ்ச்சிக்கு சிங்கப்பூரின் பயணத்துறை கழகமும், UOB வங்கியும் இணைந்து ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

“சக ஊழியர்கள் கஷ்டப்பட கூடாது” – இல்லாதவர்களும் சாப்பிட வேண்டும், என நன்கொடை அளித்த வெளிநாட்டு ஊழியர்

அதன் தொடர்ச்சியாக, நேற்று (பிப்.10) இரவு 08.00 மணியளவில் 1,500 ஆளில்லா டிரோன்களைக் கொண்டு ‘கடல்நாகம்’ என்றழைக்கப்படும் ‘டிராகன்’ காட்சிப்படுத்தப்பட்டது. இதனை சிங்கப்பூரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்ததுடன், வியந்து பார்த்தனர். குறிப்பாக, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் டிரோன் ஷோ-வைப் பார்த்து ரசித்தனர்.

அத்துடன், ‘டிராகன்’ மரினா பே சாண்ட்ஸ் வானில் ஒளிர, அங்கிருந்த பலர் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் எடுத்துக் கொண்டனர். சிங்கப்பூரில் நிகழ்த்தப்பட்ட ஆகப்பெரிய டிரோன் ஷோ இது என்பது குறிப்பிடத்தக்கது. டிரோன் ஷோவானது சுமார் 10 நிமிடங்கள் நிகழ்த்தப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பள பாக்கியால் வெடித்த போராட்டம் – நிறுவனத்தை கலைத்து செட்டில்மென்ட் செய்ய முடிவு

இந்த டிரோன் ஷோ இன்றும் (பிப்.11) நிகழ்த்தப்பட்டது. அதேபோல், பிப்ரவ்ரு 16, 17, 18 ஆகிய தேதிகளிலும் டிரோன் ஷோ நிகழ்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Verified by MonsterInsights